நீ உதவிகள் செய்த நண்பன் உன்னை ஏமாற்றுகிறானா?
அவன் உனது நட்புக்குத் தகுதியானவன் அல்ல!
***
நீங்கள் யார் யாரிடம் நல்ல உறவு வைத்திருக்கிறீர்களோ அந்த உறவு வட்டம் உங்களைப் பிரதிபலிக்கிறது,
***
பழகியவன் ஏமாற்றும் போது ஏற்படும் வலி, பழகாதவன் ஏமாற்றினால் ஏற்படும் வலியை விட எப்போதும் கூடுதலாகவே இருக்கும்,
***
மனம்விட்டுப் பழகிய நட்புகள் எப்போதும் மனதிலிருந்து அகல்வதில்லை!
அப்படிப் பழகிய நாட்கள் எப்போதும் இனிமையாகவே இருக்கும்!
***
நம்பிக்கைத் துரோகம் - நட்புத் துரோகம் - மித்திரத் துரோகம் - கூடிக் கெடுத்தல் அனைத்தும் ஒன்றே.
நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னரே துரோகத்தை அரங்கேற்ற முடியும்!
***
பிறர் நம்மை நினைத்துப் பார்க்க மாட்டார்களா என்று ஒவ்வொரு உள்ளமும் எதிர்பார்க்கிறது!
வளரும்...