தென்றல் மாத இதழில் ஜூன் 2015-ல் கவிதைப்பந்தல் பகுதியில் வெளியானது. சரஸ்வதி தியாகராஜன் அவர்கள் கொடுத்த ஒலிவடிவம் இங்கே.
இது
இயற்கை தரும்
இலவச மின்சாரம்
அது
வழங்கும் தருணமோ
மழைக்கால ரகசியம்
அத்தனை ஆற்றலையும்
கொள்ளவோ கலனில்லை
•••
ஆக்க முடியாதது
கட்டிடங்களின்
இடிதாங்கிகளில்
உச்சிக் கம்பிகளில் அகப்படும்
•••
வானம்
தனது கைரேகைகளை
யாரிடம் காட்டுகிறதோ?
•••
வெளிச்ச வலைவீசி
யாரையேனும்
சிறைப்பிடிக்கப் பார்க்கிறதா?
•••
அங்கே என்ன
ஆகாயம் பிளக்கிறதா?
இல்லை
இருட்டு வெளி உடைபடுகிறது!
•••
மழைநாட்களில்
ஒளிவிழாத காடுகளில்
ஊடுருவிப் பார்க்கிறது
விண்ணகத்துக் காவல்!
உதயகுமார் JR

No comments:
Post a Comment